பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான வேண்டும் என இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் மாநாட்டின் முதலானான நேற்று சர்வதேச தலைவர்களுக்கு கிர்கிஸ்தான் அதிபர் சோரொன்பாய் ஜீன்பேகோவ் இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. இந்தநிலையில் ரஷ்ய ரேடியோ எஃப்.எம் ஒன்றிற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான முடியும் என்றார். இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச மத்தியஸ்தத்தை பாகிஸ்தான் எதிர்பார்க்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த இம்ரான் கான், அமைதிக்கான மத்தியஸ்தரை பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்தார்.