கோவை ரயில்வே நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்

கோவை ரயில் நிலையம் முன்புறம், ரயில்வே நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வரையப்பட்டுள்ள இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அழகான ஓவியங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக கண் பார்வையற்றோர்களுக்கு வழிகாட்டும் முறை மற்றும் தூய்மை பாரதம், குழந்தைகள் கல்வி, நீர் சேகரிப்பு, பெண்கள் வளர்ச்சி உள்ளிட்ட கருத்துக்களை மையமாக வைத்து இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிலைய முன்புறம் பொதுமக்களை வரவேற்கும் வகையில், இந்த ஓவியங்கள் அமைந்திருப்பது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
 

Exit mobile version