75 வருடங்களுக்கு முன் இத்தாலியில் இருந்து ஜெர்மனியின் நாஜிப் படைகளால் எடுத்துவரப்பட்ட ஓவியம் அந்நாட்டிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இத்தாலி ஓவியர் ஜான் வான் என்பவரால் இந்த ஓவியம் வரையப்பட்டது. இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஓவியத்தை இத்தாலி அரசிடம் ஒப்படைத்தார். இத்தாலி மற்றும் ஜெர்மனி இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த ஓவியம் ஒப்படைக்கப்பட்டதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாஜிப் படைகளின் ஆதிக்கம் வீழத் தொடங்கியவுடன் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இருந்து நாஜிப் படைகள் பின்வாங்கின. அப்போது இந்த ஓவியத்தை தங்களுடன் அவர்கள் எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.