பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

பல்வேறு துறைகளைச் சார்ந்த 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில், ஆன்மீகத்துறையைச் சேர்ந்த பங்காரு அடிகளாருக்கும், டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமலுக்கும், பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நடராஜுக்கும், சமூக சேவகியான மதுரை சின்னப்பிள்ளைக்கும், மருத்துவத்துறையைச் சேர்ந்த ஆர்.வி. ரமணி மற்றும் ராமசாமி வெங்கடசாமிக்கும், டிரம்ஸ் இசைக்கலைஞரும், இசை அமைப்பாளருமான டிரம்ஸ் சிவமணிக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர, பிரபலங்களான நடிகர் பிரபுதேவா, கிரிக்கெட் வீரர் கவுதம் கேம்பிர் உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 14 பேருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மலையாள நடிகர் மோகன் லாலுக்கு, கலை, சினிமா, நடிப்பு ஆகிய பிரிவுகளில் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹரியானவைச் சேர்ந்த ஸ்ரீ தர்ஷன் லால் ஜெயின், பஞ்சாப்பை சேர்ந்த ஸ்ரீசுக்தேவ் சிங் தின்ஷா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 14 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்படுள்ளது.

பத்ம விபூஷண் விருதுகள்

பத்ம விபூஷண் விருதுகள் 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பாடகர் டீஜன் பாய், ஜிபோட்டி நாட்டைச் சேர்ந்த இஸ்மாயில் ஓமர் குயல்லே,  மகாராஷ்டிராவை சேர்ந்த எல்-அண்ட்-டி நிறுவன அதிபர் அனில்குமார் மணிபாய் நாயக், மற்றும் மேடை நாடக நடிகர் பல்வண்ட் மொரேஷ்வர் புரண்டர் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version