டெல்லியில் இரண்டாவது கட்டமாக பத்ம விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள், 4 பேருக்கு பத்ம விபூஷண், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இரண்டாவது கட்டமாக குடியரசு தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னப்பிள்ளை, அறுவை சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் குடியரசுத் தலைவர் கையால் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர்.