ப.சிதம்பரத்திற்கு ஆகஸ்டு 30 ஆம் தேதி வரை சிபிஐ காவல் நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஆகஸ்டு 30 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், மறுநாள் சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ப.சிதம்பரத்தை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது இன்றுடன் முடிவடைந்ததால், மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ப.சிதம்பரம் மீதான காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் காவலை 4 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டது. விசாரணை முடிந்த பின்னர் ஆகஸ்டு 30 ஆம் தேதி ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version