மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

2019 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு எழுதி மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் scan.tngde.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும், www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியின் மூலம் உள்ளே சென்று, பதிவெண் மற்றும் பிறந்த தேதி மூலம் மறுமதிப்பீட்டு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து, பட்டியலில் பெயர் இல்லாதவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version