வெளிநாட்டு நன்கொடை பெறும் ஆயிரத்து 807 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
வெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தாக்கல் செய்யப்படாத தொண்டு நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசு பல முறை நோட்டீஸ் அனுப்பியும், சில தொண்டு நிறுவனங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தாக்கல் செய்யாத ஆயிரத்து 807 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்ட தொண்டு நிறுனவங்கள் வெளிநாட்டு நன்கொடையை இனி பெற இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 800 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.