சென்னை தாம்பரம், குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1008 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இப்பகுதிகளில் ஏற்கனவே, ஆயிரத்து 372 கேமராக்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில் தற்போது பொருத்தப்பட்டுள்ள காமிராக்களையும் சேர்த்து இரண்டாயிரத்து 380 கேமராக்கள் கண்காணிப்பில் உள்ளன. தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் இதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே விசுவநாதன், சென்னை மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் 7 மாதங்களில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் முதன்முதலாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் காண முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post