4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டிருக்கிறது

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம், பதாகை உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் முதல் முறையாக ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு என்ற புதிய அமைப்பு தேர்தல் ஆணையத்தின் தரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ், வேட்பாளர்கள் தங்களது விளம்பரங்களை அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியிடவதற்கு முன்பு அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முறையாக அனுமதி பெறவேண்டும் என்று அறிவுறுத்தினார். இதேபோல் முறையான அனுமதி இல்லாமல் வேட்பாளர்களின் விளம்பரங்கள் வெளியிடப்படும் பட்சத்தில் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version