அசாமில் தொடர் கனமழையினால் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தினால் பாதிப்பு

அசாமில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக அசாமின் கோக்ராஜர் மாவட்டத்தில் பல கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. உள்ளூர் நிர்வாகத்துடன் ராணுவ வீரர்களும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோலகாட், லக்கிம்பூர், தேமாஜி உள்ள 17 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கும் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளில் ஈடுபடுவது சவாலான காரியமாக உள்ளது. மீட்பு பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version