சென்னை கோவளம் கடற்கரையில் சர்வதேச அலைச்சறுக்குப்போட்டிகள் இன்று முதல் நடைபெறுகின்றன.
அலைச்சறுக்கு விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த போட்டியில் 200-க்கும் அதிகமான அலைசறுக்கு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிக்கான அறிவிப்பை அலைச்சறுக்கு போட்டியின் தூதுவரான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், திரைப்பட நடிகை ரெஜினா, டென்னிஸ் விளையாட்டு வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் உள்ளிட்டோர் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், பொதுமக்களும் இந்த போட்டிகளை காண சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.