ஜப்பானில் ஹகிபீஸ் புயலால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஜப்பானில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய ஹகிபீஸ் புயலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்ததை அடுத்து, சேதமடைந்த கட்டிடங்களுக்கு கூடுதல் நிதியுடன் மறுகட்டமைப்பு பணிகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹகிபீஸ் புயல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இப்புயலால், 500க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 7 பேர் காணமல் போகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், வீடுகளை இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஹகிபீஸ் புயலால், அந்நாட்டில் நடந்து வரும் கட்டுமான பணிகள் சீர்குலைந்தன. இதனால் கூடுதல் நிதி ஒதுக்கி மறுகட்டமைப்புகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Exit mobile version