வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையம் வழியாக அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையை சேர்ந்த துணை இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள், பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா, ஸ்கூட், மலிண்டோ உள்ளிட்ட விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 100-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் இருந்து 30 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் 15 பேர் திருச்சியில் ரகசிய இடத்திலும், 85 பேர் விமான நிலையத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.