திட்டமிட்டபடி நாளை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுக்க பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி துவங்கி, ஏப்ரல்-6 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ-மாணவிகள் எழுதினர். இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவாக முடிவடைந்து, மதிப்பெண்கள் கணினி மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணியும் முற்றிலும் முடிவடைந்து விட்டதாகத்தெரிகிறது. ஆகையால், பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததுபோல், நாளை காலை 9.30 மணிக்கு www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்தேர்வு முடிவுகள் அலைபேசி மூலம் உடனடியாக குறுந்தகவல்களாக வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.