தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் விற்பனைக்கு வந்ததால், வரும் வாரங்களில் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து தரம் வாரியாக 120 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. வரலாறு காணாத விலை உயர்வால் வெளிநாடுகளிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்கமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்தநிலையில் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம், பாவூர்சத்திரம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை வரும் வாரங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், தற்போது பெய்து வரும் மழையால் சிறிய வெங்காயம் வரத்தும் குறைவாக உள்ளது. இதனால் கிலோ 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது.