வெளிமாநில வாகனங்கள் இன்று முதல் தமிழக எல்லைக்குள் வர தடை

தமிழக எல்லைக்குள் வெளிமாநில வாகனங்கள் வர விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை 31 ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று மூதல் வெளிமாநில வாகனங்கள் தமிழக எல்லைக்குள் வர தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட இருக்கிறது. தவிர்க்க இயலாத காரணங்களான, இறப்பு போன்றவற்றுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட இருக்கிறது. பொது மக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version