காங்கிரஸ், திமுக கூட்டணியை வீழ்த்துவதுதான் எங்கள் குறிக்கோள்

மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தீங்கு இழைத்த காங்கிரஸ், திமுக கூட்டணியை வீழ்த்துவது தான் எங்கள் குறிக்கோள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூரில் சமுதாய கூடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். 

Exit mobile version