ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் அதிக விளைச்சல் தரும் காளிப்பிளவர்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் மலைப்பகுதியில் காளிப்பிளவர் விளைச்சல் அதிகமாக இருப்பதால் அதிக லாபம் ஈட்டுவதாக விவசாயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஒட்டன்சத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், கண்ணணூர் ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் மலைப்பகுதியில் நன்கு வளரக்கூடிய காளிபிளவரை விவசாயம் செய்துள்ளனர்.

இந்த காளிபிளவர் நாற்று நடவு செய்த நாளிலிருந்து 90 நாட்களில் அறுவடைக்கு வரும் என்றும், இதற்கு நாற்று, உரம், மருந்து, ஆட்கள் கூலி என ஒரு ஏக்கருக்கு 35, ஆயிரம் முதல் 40, ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version