தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மற்ற மாநிலங்கள் பாராட்டு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிற மாநிலங்கள் பாராட்டி வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கழிவு நீர் அகற்றும் ரோபோ எந்திரத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். பிறமாநிலங்கள் பாராட்டும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கிவைக்காமல், அன்போடு கவனித்துக்கொள்ள வெண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கோவை மாநகராட்சியில் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை 100 சதவீதம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Exit mobile version