விராலிமலையில், முதல்வர் தலைமையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்த 300-க்கும் மேற்பட்டோர், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னை பசுமை வழிசாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வந்திருந்த மாற்றுக் கட்சி பிரமுகர்கள், முதலமைச்சரின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக முதலமைச்சரை சந்தித்த மாற்றுக் கட்சி பிரமுகர்கள், முதலமைச்சருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இணைந்தவர்களுடன் சேர்ந்து குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

Exit mobile version