சேலத்தில் திமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் ஒருபகுதியாக, ஓமலூர் அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சியில் இருந்து விலகிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், முதலமைச்சர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டு, முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். புதியதாக கட்சியில் இணைந்தவர்களை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.