காஷ்மீர் விவகாரத்தில் மற்ற நாட்டின் கருத்துகள் ஏற்கபடாது : பிரதமர் மோடி

காஷ்மீரில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், 3வது நாட்டின் கருத்தை எடுத்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த  இருவரும், காஷ்மீர் விவகாரம் குறித்து தாங்கள் விவாதித்தாக கூறினர். அப்போது பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்சனையை இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் என்று தெரிவித்தார். 

Exit mobile version