பிற நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைய தடை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய யூனியனின் எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, எல்லைகளை மூட ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. அதன்படி, 27 ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் அடுத்த 30 நாட்களுக்கு மூடப்படும் எனவும், பிற நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாட்டினர் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பிற நாடுகளுக்கு பயணம் செய்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version