ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி நடக்க இருந்த 93ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக ஆஸ்கர் விருது வழங்கு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 92 ஆண்டு வரலாற்றில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அதிக நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை.

Exit mobile version