ஒசாமா பின்லேடன் மகன் பற்றி தகவல் தெரிவித்தால், 7 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை, கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது. ஒசாமாவின் மகனான ஹம்சா பின்லேடன், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், ஹம்சா பின்லேடன் பற்றி தகவல் அளித்தால், ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் ஆகும். பாகிஸ்தான், ஆப்கன் எல்லையில் ஹம்சா பின்லேடன் பதுங்கியிருக்கலாம் என்றும், ஈரானுக்கு தஞ்சமடைய வாய்ப்பிருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது.