உடலுறுப்பு தானம் : செய்தி தொகுப்பு…

உடலுறுப்பு தானம் பெற்றவர்களும், தானம் அளித்தவர்களும் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் வாழமுடியும் என்கிறார் ரீனா… யார் இந்த ரீனா … இவரை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

உடலுறுப்பு தானம் பெற்றவர்களும், தானம் அளித்தவர்களும் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் வாழமுடியும் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக “வோர்ல்ட் டிரான்ஸ்பிளாண்ட் கேம்ஸ்’ உலக அளவில் நடத்தப்பட்டு வருகிறது…

இதில் சிறந்த வீராங்கனையாக திகழ்கிறார் ரீனாராஜ்,… இந்த விழிப்புணர்வில் கலந்துகொண்ட முதல் இந்திய பெண் இவரே.

ரீனா ராஜ் ஒருமுறை அல்ல இருமுறை மாற்று இதய அறுவை சிசிச்சைப் பெற்றவராவார்.
உடலுறுப்புகளை தானமாக பெற்ற ஆண்களும், பெண்களும் அதிக அளவில் விளையாட்டில் பங்கேற்க முன்வர வேண்டும் என்று கூறும் ரீனா ராஜ், முன்னாள் டிராக் அன்ட் பீல்ட் அத்லடிக் மற்றும் ஹாக்கி வீராங்கனையாவார்.

2006- ஆம் ஆண்டு இவருக்கு இதயக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மாற்று இதயம் கிடைத்தவுடன் 2009-ஆம் ஆண்டு இதய மாற்று சிகிச்சை மேற்கொண்டார். கர்நாடகாவில் முதன்முதலாக இதய தானம் பெற்றவர் இவர்தான். 2017-ஆம் ஆண்டு மீண்டும் இதயத்தில் பிரச்னை ஏற்பட்டபோது இரண்டாவது முறையாக இதய தானம் பெற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.. இரண்டு முறை இதய தானம் பெற்ற இந்திய பெண்ணும் இவரே.

இருமுறை இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரீனாராஜ் ஏற்கெனவே விளையாட்டு வீராங்கனை என்பதால், ஸ்கை டைவ், மாரத்தான் ஓட்டம், சைக்ளோதோன்ஸ், நீருக்கடியில் நடப்பது போன்ற விளையாட்டுகளில் துணிச்சலுடன் பங்கேற்று முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

உடலுறுப்பு தானம் பெற்றவர்களும், தானம் அளித்தவர்களும் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் வாழமுடியும் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்..

Exit mobile version