நீலகிரி மாவட்ட பேருந்துகள், சுற்றுலா வாகனங்களில் குப்பை தொட்டி வைக்க உத்தரவு

நீலகிரி மாவட்டத்தை தூய்மையாக வைக்கும் வகையில் அரசு மற்றும் மினி பேருந்துகளில் குப்பை தொட்டிகளை வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் சாலை விதிகளைப் பின்பற்றாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மீறியதாக இதுவரை 5000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மழலையர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. சாலை விதிகளை கடைபிடிக்காத வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version