பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Flipkart இளைஞர் ஒருவர் ஆர்டர் செய்த கேமராவுக்கு பதிலாக டைல்ஸ் கற்கள் அனுப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த விஷ்ணு சுரேஷ் என்பவர் ரூ.27,500க்கு கேமரா ஒன்றை ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து அதற்கான பணத்தையும் உடனடியாக செலுத்தியுள்ளார். ஆனால் இந்த வகையான ஆன்லைன் வர்த்தக தளங்களில் சில சமயம் நாம் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருட்கள் டெலிவரி செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் விஷ்ணு சுரேஷ் வீட்டிற்கு வந்த பார்சலை தூக்கி பார்த்த போது அது அதிக எடையுடன் இருந்தது. இதனால் சந்தேகத்துடன் பிரித்து பார்த்த போது அதில் டைல்ஸ் கற்கள் இருந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அதனை வெளியே எடுத்த போது உள்ளே டைல்ஸ் கற்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற புத்தகமும், வாரண்டி கார்டும் இருந்துள்ளது.
இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டப்போது, டைல்ஸ்க்கு பதிலாக கேமராவை அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இந்த பதிலை கேட்ட விஷ்ணு சுரேஷ் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளார்.