உதகை நகராட்சிக்குட்பட்ட தினசரி சந்தையில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைப்பாதைகளை ஆக்கிரமித்திருக்கும் கடைகளை உடனடியாக அகற்றுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவும், பொது இடங்களை தூய்மையாக வைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் உதகை நகராட்சி பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நடைப்பாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகளை அகற்றாமல் இருந்த கடைகளையும் உடனடியாக மூட ஆணையிட்ட மாவட்ட ஆட்சியர், இறைச்சி கழிவுகளை அகற்றிய பின் கடைகளை திறக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.