ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக, வரும் 14ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்டக் கால்வாய்கள் மூலம் கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் ஒற்றை படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலம் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு 23 அயிரத்து 846 புள்ளி 40 மில்லியன் கன அடி தண்ணிர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஈரோடு மாவட்டம் கோபி, பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப முதல் போக பாசனத்திற்காக பவானி சாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு!
-
By Web Team
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023