தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியுள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 53-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சார்பில், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, 40 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியுள்ளது.