பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்தது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசு தொழில் முடக்கத்தால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பசுமை பட்டாசு, மாசுக் குறைந்த பட்டாசு தயாரிப்பது குறித்து பிப்ரவரி 26-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.