கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
இதேபோல், உதகையில் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் முக்கிய சுற்றுலா தலங்களில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி உள்ளது.