தேமுதிக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம்

மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் விநியோகம் இன்று தொடங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, தேமுதிக தொண்டர்களுக்கு இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விநியோக்கப்படும் விண்ணப்பங்கள், வரும் மார்ச் 6-ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனு விநியோகத்தை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் துவங்கி வைத்தார். பொதுத் தொகுதிக்கான விருப்ப மனுவை 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியும், தனித்தொகுதிக்கான விருப்ப மனுவை 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியும் வாங்கிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version