நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 4ம் நாளாக இன்றும் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்களை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கடந்த 4ம் தேதி வழங்கி துவக்கி வைத்தனர். இந்த நிலையில் 4ம் நாளாக இன்றும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விருப்ப மனுக்களை பெறுவதில் அதிமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் விருப்ப மனுக்களை பெற்று செல்கின்றனர். வரும் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.