புதுச்சேரியில் சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காததால், பேரவையிலிருந்து எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. அப்போது, எதிர்கட்சி தலைவரான ரங்கசாமி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சட்டபேரவை கூட்டுத்தொடரை எவ்வாறு நடத்த முடியும் என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு உரிய பதில் கிடைக்காததால் பிரதான எதிர்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.