ஆந்திர அரசின் சம்பள குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ஆந்திர அரசின் சம்பள குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்ததால் விஜயவாடா நகரம் முடங்கியது. 

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக புதிய சம்பள உயர்வு ஆணையத்தை அமைத்தது.

இந்த புதிய சம்பள உயர்வு ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜயவாடாவில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தக்கூடாது என்றும், சம்பள குறைப்பு நடவடிக்கையை ஏற்க மாட்டோம் என்றும் ஊழியர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

தங்களது கோரிக்கைகளை ஏற்கவிட்டால் வருகிற 7ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாகவும் அரசு ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தால் விஜயவாடா நகரம் முழுவதும் முடங்கியது.

Exit mobile version