குடியுரிமை சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுகின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி

குடியுரிமை சட்டத்தின் மூலமாக, மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கட்சிகள் வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் போராட்டத்தை தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டினார்.தொடர்ந்து பேசிய அவர், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு குடியேறிய தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் எவ்வித குறைபாடும் இன்றி வாழ்ந்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சித் துறையின் மூலமாக 13 விருதுகளை தமிழக அரசு பெற்றிருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பல துறைகளில் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக, இதுவரை உள்ளாட்சித் துறையில் மட்டும் 99 விருதுகளை தமிழக அரசு பெற்றிருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Exit mobile version