பாலகோட் தாக்குதல் குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்து தேச நலனை பாதிக்கிறது

பாலகோட் தாக்குதல் குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்து தேச நலனை பாதிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, தொடக்கத்தில் இந்திய விமான படைக்கு ஆதரவளித்த காங்கிரஸ், அதன்பிறகு இந்தியாவில் உள்ள அரசியல் கருத்துகளை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். 21 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதலும் அரசியலாக்கப்படுகிறது என்று பிரதமர் மோடியை குற்றம்சாட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிய அவர், எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற கருத்துகள் தேச நலனை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் அவமதிப்பதற்கான கருவியாக எதிர்க்கட்சிகளின் கருத்துகள் அமையும் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version