பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தின.
குவெத்தா பகுதியில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இம்ரான் கானுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பிரதமர் தேர்தல் நேர்மையாக நடைபெறாததால், இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பேரணியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரெஹ்மான், ஆகஸ்ட் மாதத்திற்குள் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்றார். இல்லையென்றால் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அக்டோபரில் மாபெரும் பேரணி நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார்.