சிஏஏ தொடர்பாக எதிர்கட்சிகள் வன்முறையை தூண்டுகின்றன- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பெரும் கலவரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஒடிஸா தலைநகர் புவனேஸ்வரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், பலமுறை இதை நான் தெரிவித்து இருந்தாலும், தற்போது மீண்டும் கூறுகிறேன் என்றும் கூறினார்.  குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காரணமாக எந்தவொரு நபரின் குடியுரிமையோ அல்லது இஸ்லாமியர்களின் குடியுரிமையோ பறிக்கப்படாது எனவும்,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் நோக்கிலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது எனவும் அவர் எடுத்துரைத்தார்.

Exit mobile version