பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தாம் முதலமைச்சராக இருந்த போது கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான இறுதி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அவர், வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவால் தமிழகம் வளர்ச்சி அடையும் எனக் குறிப்பிட்டுள்ளார். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமெனவும் கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திட்டத்திற்கான இறுதி வரைவு அறிக்கையை ஜல் சக்தி துறை, தமிழக அரசின் கருத்துக்கு அனுப்பி உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்காக தமிழக விவசாயிகள் சார்பிலும், தமது சார்பிலும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவு, கூட்டாட்சி முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.