கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 5 நாளில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டிலிருந்து தண்ணீர் வீணாகாமல் செல்ல கரையை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிகளை, கிருஷ்ணா நதி நீர் திட்ட செயற்பொறியாளர் மரிய ஹென்றி ஜார்ஜ் நேரில் பார்வையிட்டார்.

Exit mobile version