சாமானிய மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசின் பட்ஜெட் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2020-21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. வேலை வாய்ப்பு, வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு போன்ற பல்வேறு அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புடன் சாமானிய மக்கள் காத்திருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, அரசுக்கு போதிய நிதியை பெருக்கும் வகையிலான பட்ஜெட்டை தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனிடையே, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்ப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.