கடன் தவணையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடன் தவணைத் தொகையை செலுத்த அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என தெரிவித்தார். மேலும் கடன் தவணையை செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.