எதிர்கட்சிகளின் கருத்து நாட்டுக்கு முக்கியமானது : பிரதமர் மோடி

எதிர்கட்சிகளின் கருத்து நாட்டுக்கு முக்கியமானது என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் பங்கேற்க நாடாளுமன்றம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “அரசியல் வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு எதிர்கட்சிகள் மக்கள் நலனில் ஆளும் கட்சிக்கு துணையாக இருக்க வேண்டும்” என்று கூறிய மோடி, “எதிர்கட்சிகளின் கருத்து நாட்டுக்கு முக்கியமானது” என்று தான் கருதுவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் 17வது மக்களவை தேர்தலில் தான் அதிக பெண் வாக்களித்திருப்பதாகவும், அதிக பெண் எம்.பிக்கள் வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறினார். பல சதாப்தங்களுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக தற்போது தான் ஒரு அரசு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டிக்கு சேவை செய்ய தங்களுக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு அளித்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக நடந்த கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version