மஞ்சளாறு அணையில் இருந்து குடிநீருக்காக நீர் திறப்பு

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், கொடைக்கானலுக்கு கீழ் பகுதியில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. மஞ்சளாறு அணையின் மொத்த நீர் மட்டம் 57 அடியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வரட்டாறு, மூலாறு, தலையாறு ஆகிய நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர் அணையில் தேங்குகிறது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று ஆண்டுதோறும் முதல் போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, காமக்காபட்டி, புல்லக்காபட்டி, சாத்தா கோவில்பட்டி, அட்டணம்பட்டி, தேவதானப்பட்டி ஆகிய ஊர்களின் குடிநீர் தேவைக்காக மஞ்சளாறு அணையில் இருந்து வினாடிக்கு 10 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Exit mobile version