பில்லூர் அணை முழு கொள்ளவை எட்டியதால் உபரிநீர் திறப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை முழு கொள்ளவை எட்டி உள்ளதால், பாதுகாப்பு கருதி, உபரிநீர் முழுவதுமாக திறந்துவிடப்பட்டுள்ளது.

பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் 98 அடியை எட்டியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி, உபரி நீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பில்லூர் அணை இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், திறந்துவிடப்படும் உபரிநீர் முழுவதும் பவானிசாகர் அணையில் சென்று சேருவதால் பவானி சாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.

Exit mobile version