திருவண்ணாமலை மாவட்ட ஆரணி மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
ஆரணி மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் செஞ்சி வே. ஏழுமலை போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு இந்து அறநிலையதுறை அமைச்சர் சேவூர்.எஸ்,இராமச்சந்திரன் அரணி தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஆரணி தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் பாமக,தேமுதிக, பாஜக, புதியநீதிக்கட்சி, புரட்சிபாரதம், புதியதமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் அதிமுக கூட்டணியின் தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன் , கருப்பண்ணன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள ஆனந்தனை அமோக வெற்றி பெறவைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காவிரி நதிநீர் திட்டம் மத்திய அரசின் உதவியோடு விரைவில் செயல்படுத்த முதலைமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக கூறினார்.